Breaking

Tuesday

சபீனாவில் வித்தியாரம்பவிழா!


காரைதீவு  நிருபர் சகா

 நேற்று ( 15.01.2018) மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் 2018 ஆம் ஆண்டில் தரம் 1 இல் அனுமதி பெற்ற புதிய மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப விழா நிகழ்வுகள் அதிபர் எம்.ஐ.எம் அஸ்மி அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

 இந்நிகழ்வில் முன்னாள் கல்விப் பணிப்பாளர் சட்டத்தரணி எம்.சி. ஆதம்பாவா பிரதம அதிதியாகவும் பாடசாலையின்  இணைப்பாளர் எஸ்.சிவசுந்தரமூர்த்தி  அம்பாரை மாவட்ட மருத்துவ விற்பனை பிரதிநிதிஎஸ்.ஏ. சமட் ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

புதிய மாணவர்கள் வரவேற்கப்பட்டதுடன் அவர்களுக்கு வித்தியாரம்பம் அதிதகளால் நடைபெற்றது.

மாணவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.






செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog