Breaking

Monday

இந்தியாவின் ஆயுஸ் அமைச்சு இணைந்து நடாத்துகின்ற முதலாவது சர்வேதச சித்த மாநாட்டுடன் கண்காட்சியும்.


பைஷல் இஸ்மாயில் –

யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்ற முதலாவது சர்வதேச சித்த மாநாடு மற்றும் கண்காட்சிக்கு கிழக்கு மாகாண கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழுள்ள ஆயுர்வேத வைத்திய சேவையில் கடமையாற்றுகின்ற 12 பேர் கலந்துகொள்ளவுள்ளதாக அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கே.எம்.அஸ்லம் இன்று (19) தெரிவித்தார்.

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் சித்த மருத்துவப் பிரிவும், வட மாகாண ஆயுர்வேத திணைக்களம் மற்றும் இந்தியா அரசாங்க ஆயுஸ் அமைச்சும் இணைந்து யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் நடாத்துகின்ற இந்த மாநாட்டில் தேசிய ரீதியிலுள்ள சித்த, யுனானி, ஆயர்வேத வைத்தியர்களினால் மிகக் கூடுதலான ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு அது தொடர்பிலான உரைகளும் இடம்பெறவுள்ளது.  

இந்த மாநாடு எதிர்வரும் 23 ஆம் திகதி தொடர்க்கம் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாகவும், இதில் 23, 24, 25 ஆம் திகதிகளில் சித்த, யுனானி, ஆயுர்வேத வைத்தியர்களுக்கான பயிற்சி பட்டறையும், 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் ஆராய்ச்சி தொடர்பான மாநாடும், கண்காட்சியும் இடம்பெறவுள்ளது.

குறித்த தினங்களில் இடம்பெறுகின்ற இந்த நிகழ்வுகள் யாவும் காலை 9 மணி தொடர்க்கம் மாலை 5 மணிவரை இடம்பெறவுள்ளதாகவும், இதில் தேசிய ரீதியாகவுள்ள சித்த, யுனானி, ஆயுர்வேத வைத்தியர்களும், உத்தியோகத்தர்களும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

கிழக்கு மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி ஆர்.சிஸ்ரீதரின் ஒத்துழைப்புடன் குறித்த வைத்திய அத்தியட்சகர் கே.எம்.அஸ்லம் தலைமையின் கீழ் ஆயுர்வேத வைத்தியர்கள் 7 பேருடன், உத்தியோகத்தர்கள் 5 பேர் கொண்ட குழுவினரே இந்த முதலாவது சர்வேதச சித்த மாநாடிலும், கண்காட்சியிலும் கலந்துகொண்டு, ஆய்வுக் கட்டுரையையும் சமர்ப்பித்து அதுதொடர்பில் உரையாற்றவுள்ளதாகவும் அவர் கூறினார்.

சித்த மருத்துவத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கத்துடன் இந்த மாநாடு அமையப் பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.  
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog