Breaking

Saturday

ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய உத்தரவு....


ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நடந்த அரசியல் கொலைகள் சம்பந்தமான விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரி ஒருவர் தமக்கு அறிவித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி, ராஜபக்சவினருடன் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்க உள்ளதால், ராஜபக்சவினருக்கு எதிரான ஊழல், மோசடி மற்றும் கொலைகள் சம்பந்தமான வழக்குகளின் விசாரணைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பரவி வரும் வதந்தி தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அந்த அதிகாரி இதனை கூறியுள்ளார்.

யோசித ராஜபக்ச சந்தேகநபர் என கருதப்படும், றக்பி விளையாட்டு வீரர் மொஹமட் வசீம் தாஜூடீன் கொலை சம்பந்தமான வழக்கு புதிய கோணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த கொலை சம்பந்தமான விசாரணைகளை எந்த காரணம் கொண்டும் நிறுத்த வேண்டாம் என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு அமைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் கொலைகள் தொடர்பான விசாரணைப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
-lankasri-
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog