Breaking

Friday

செப்டம்பரில் மாகாண சபைத் தேர்தல்!


எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்பார்ப்பதாக அதன் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பொன்றின் போது இது தொடர்பான கருத்துக்களை வௌியிட்ட அவர், தற்போதைக்கு கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகள் கலைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கான தோ்தல் நாடாளுமன்றப் பிரேரணையொன்றின் மூலமாக பிற்போடப்பட்டுள்ளது.

அதே நேரம் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை பிற்போட காரணமாக அமைந்த எல்லை மறுசீரமைப்பு குழுவினரின் அறிக்கை உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.எனவே அதனை நாடாளுமன்றத்தில் சாதாரணப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றி விட்டால் தேர்தல்களை நடத்துவதற்கான தடைகள் நீங்கிவிடும்.

அவ்வாறு நடைபெற்றால் எதிர்வரும் செப்டம்பரில் வடக்கு , வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களின் ஆயுட்காலம் நிறைவடைகின்றது. இவற்றுடன் சேர்த்து கலைக்கப்பட்ட ஏனைய மாகாண சபைகளுக்கும் தேர்தல்களை நடத்திவிடமுடியும் என்றும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog