Breaking

Tuesday

நஸீர் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம்...


பைஷல் இஸ்மாயில் -

முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் இன்று (06) சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்றுக் கொண்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மான் அவர்களின் ராஜினாமாவைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே ஏ.எல்.எம்.நஸீர் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய சத்தியப் பிரமாண நிகழ்வை அடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.




செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog