Breaking

Monday

பிரபலங்களின் முகத்தை வைத்து உருவாக்கப்படும் ஆபாச காணொளிகள்...!


ஆபாச காணொளிகளிலுள்ள பெண்களின் முகத்தை மட்டும் நீக்கிவிட்டு அதற்கு பதிலாக பிரபல நடிகைகளின் முகத்தை மாற்றி பகிரப்படுவது சமீபத்தில் உலகம் முழுவதும் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

இதுபோன்ற மோசடியான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு பயன்படுத்தப்படும் கருவிகள் தற்போது அணுகுவதற்கு எளிமையாகவும், சக்திமிக்கதாகவும் மாறியுள்ளதால் பலரது கற்பனைகளை இணையதளத்தின் மூலம் பகிர்வதும் சாத்தியமாகியுள்ளது வரும் மாற்றங்களானது சமூகத்திற்கு கடும் விளைவுகளை ஏற்படுத்தவல்லது. தற்போது பெரும் பிரச்சனையாக உள்ள 'போலிச் செய்திகள்' விவகாரம் அதன் தொடக்க காலத்திலேயே உள்ளது.

ஆபாச காணொளிகளில் இருக்கும் நபர்களின் முகங்களை மட்டும் மாற்றம் செய்து பகிரும் இந்த செயற்பாடானது அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக செய்யப்பட்டது. குறிப்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முகத்தை சில ஆபாச காணொளிகளில் இணைத்து வெளியிடப்பட்ட காணொளிகள் அந்நேரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

எப்போதும் போலவே தொழில்நுட்பம் சார்ந்த இந்த விவகாரத்தை எப்படி அணுகுவது என்று தெரியாமல் கல்வி நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் குழம்பிப்போய் உள்ளன. இந்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுவதற்கு காரணமான இணையதளங்களை பல்துறை வல்லுநர்கள் உன்னிப்பாக கவனித்து வந்தாலும், இதை தடுத்து நிறுத்துவதற்குரிய வழித் தெரியாமல் பதற்றமடைந்துள்ளனர்.

இவை எவ்வாறு உருவாக்கப்படுகிறது?

இத்தகைய காணொளிகளை உருவாக்குவதற்கு பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு மென்பொருளானது அதன் வடிவமைப்பாளரின் கருத்துப்படி, அந்த பொருள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வெளியிடப்பட்டதிலிருந்து ஒரு லட்சத்திற்கும் மேலான முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஹாலிவுட் படங்களிலுள்ளதை போன்று தத்ரூபமான திருத்தங்களை மேற்கொண்டு இதுபோன்ற காணொளிகளை உருவாக்குவதற்கு பெரும் பணச்செலவோடு கருவிகளும், திறனும் தேவைப்படும்.

ஆனால், இயந்திர நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கீழ்காணும் மூன்று கட்ட வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் இத்தகைய காணொளிகளை உருவாக்குவது எளிதாகிறது: ஒருவரின் புகைப்படத் தொகுப்பை எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு மாற்றம் செய்யப்பட வேண்டிய ஆபாச காணொளியை தேர்ந்தெடுத்தவுடன், சிறிது காத்திருக்கவும். எதிர்பார்த்த காணொளியை உங்களது கணினியே தன்னிச்சையாக செயல்பட்டு உருவாக்கிவிடும். ஆனால், ஒரு சிறிய காணொளியை உருவாக்கக் கூட 40 மணிநேரத்திற்கும் மேலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலும் இதுபோன்ற காணொளிகள் பிரபலங்களின் புகைப்படங்களை வைத்தே உருவாக்கப்படுகிறது. இந்த செயற்முறை உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக தென் கொரியாவிலிருந்து இதுகுறித்த தேடல்கள் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிவைக்கப்படும் பிரபலங்கள்

குறிப்பாக சில பிரபலங்கள் இதுபோன்ற ஆபாச காணொளிகளை உருவாக்குபவர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளனர்.

எனவே, இம்முறையை பயன்படுத்தி உருவாக்கப்படும் ஆபாச காணொளிகள் உண்மையிலேயே பல அவதூறுகளையும்

ஹாலிவுட் நடிகையான எம்மா வாட்சன் மற்றும் இயக்குனரான நடாலி போர்ட்மேன் ஆகியோரை கொண்ட ஆபாச காணொளிகளே பெருமளவில் உருவாக்கப்படுகிறது.

மேலும், மிஷெல் ஒபாமா, இவான்கா டிரம்ப் மற்றும் கேட் மிடில்டன் ஆகியோரை குறிக்கும் காணொளிகளும் உருவாக்கப்பட்டு பகிரப்படுகிறது.

'வண்டர் வுமன்' படத்தில் நடித்த கல் கடோட்டை மையமாக வைத்தே இதுபோன்ற காணொளிகள் முதல்முறையாக உருவாக்கப்பட்டதாக தெரிகிறது.

இதுபோன்ற காணொளிகளை தங்களது தளங்களில் பகிர்வதை தடுக்கும் நடவடிக்கைகளை சில இணையதளங்கள் தொடங்கியுள்ளன.

குறிப்பாக ’ஜிஎஃப்ஒய்கேட்’ (Gfycat) என்னும் புகைப்பட இணையதளம், இதுபோன்ற காணொளிகளிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்று நினைக்கும் பதிவுகளை தனது தளத்திலிருந்து நீக்கியுள்ளது.

காணொளி போன்ற பல விடங்களை பகிர்வதற்கான சமூக வலைத்தளமாக உருவெடுத்துள்ள ரெட்டிட் இந்த விவகாரத்தில் இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

ரெட்டிட் போன்ற சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் விவாதங்களை பொறுத்தே கூகுள் தளத்தில் மேற்கொள்ளப்படும் தேடல்களுக்கான முடிவுகள் அளிக்கப்படுகின்றன.

எனவே, இதுபோன்ற தொழில்நுட்பம் மற்றும் கருவிகள் சார்ந்த விடயங்களை தேடும்போது காண்பிக்கப்படும் முடிவுகளை மறைப்பதற்குரிய நடவடிக்கைளை எடுத்து வருகிறது.

தொழில்நுட்பம் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகளை கடத்தி செல்வதில் ஆபாசப்பட தொழில்களே பல ஆண்டுகளாக முன்னிலை வகித்து வருகிறது. அதாவது, மேம்படுத்தப்பட்ட காணொளி உருவாக்க முறையாக இருந்தாலும் சரி, காணொளி கேசட்டுகளாக இருந்தாலும் சரி ஆபாசப்பட தொழிலே அவற்றை முன்னெடுத்து சென்று வருகிறது.

-BBC-
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog