Breaking

Friday

சம்மாந்துறை பிரதேச சபையில் பெண்கள் ஆசனம்...


By Ziyad Aia

பிரதேச சபையில் கட்டாயம் 25% பெண்கள் உறுதி படுத்த பட வேண்டும். இது நாடாளுமன்ற தேசிய பட்டியல் போன்று விகிதாசாரப்படி தீர்மானிக்க படும்.

இம்முறை சம்மாந்துறை பிரதேச சபையில் செல்லுபடியான மொத்த வாக்குகள் 34262. (Note:- 20% க்கு குறைவான வாக்குகளோடு சேர்த்து 3 ஆசனங்களுக்கு குறைவாகவும் பெறும் கட்சிகளையும் (Both Conditions should be fullfilled) அதில் இருந்து நீக்க வேண்டும். அதாவது JVP ,TVK பெற்ற வாக்குகள் நீக்கப்பட வேண்டும். )

எனவே (13022+12911+6932) = 32865

இதனை 25% ஆன பெண்கள் ஆசனம் 5 ஆல் வகுக்கும்போது 6573

இதனை கட்சிகளுக்கு பிரயோகித்தால்

UNP பெற்ற வாக்குகளின் படி 13022/6573 = 1 மீதி 6449,

ACMC பெற்ற வாக்குகளின் படி 12911/6573 = 1 மீதி 6338

SLFP பெற்ற வாக்குகள் படி 6932/6573 = 1 மீதி 359

So, முதல் கட்ட பிரிப்பில் UNP 1, ACMC 1 , SLFP 1

ஏனைய 2 ஆசனங்களும் மிகுதியை வைத்து தீர்மானிக்க படும். அதன்படி UNP கொண்ட மிகுதி 6449 க்கு ஒன்றும் ACMC மிகுதி 6338 க்கு ஒன்றும் பெண் உறுப்பினர் வழங்கப்பட வேண்டும். But, ACMC க்கு இருக்கும் Bonus ஆசனமே 1 ஆகையால் 😂 அதட்கு வழங்க முடியாது. எனவே அடுத்த நிலையில் உள்ள மீதி 359 ஐ கொண்டுள்ள SLFP வழங்க வேண்டும்.

So, எனவே UNP 2, ACMC 1, SLFP 2.

இதில் வட்டார முறையில் கட்சி பெண் ஆசனம் பெற்று இருந்தால் அது கழிக்கப்படும். உதாரணமாக SLFP வட்டார முறையில் Malwatta வில் பெண் ஆசனம் பெற்று இருந்தால் Bonus இல் ஒரு பெண் நியமித்தால் போதும்.

So, இறுதியாக UNP 2, ACMC 1, SLFP 1 Bonus முறையில் பெண்கள் நியமிக்க வேண்டும். மொத்தமாக (வட்டார முறையில் தெரிவான பெண்ணோடு சேர்த்து) 5 வரும்.

இம்முறை மூலமே 25% ஆன பெண் ஆசனங்கள் அதாவது 5 பெண் ஆசனங்கள் தீர்மானிக்க படும்.

(பிட்குறிப்பு SLFP இன் பெண் Bonus சம்பந்தமாக சில கருத்து வேறுபாடுகள் நிலவுவதால் சில வேளை அது 2 உம் ஆண்களுக்கே வழங்கப்படும் சாத்தியமும் உண்டு. காரணம் SLFP கட்சி பெற்ற ஆசனங்களில் 4 இல் 1 வட்டார முறைப்படியே பெண் உறுப்பினரை கொண்டு உள்ளது. அதாவது 25%. இதனால் Bonus மூலம் நியமிக்கப்படும் 2 உறுப்பினர்களும் ஆண்களாக அமைய வாய்ப்பு உண்டு. இது பற்றிய இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையாளருக்கே உண்டு என தெளிவாக உள்ளூராட்சிமன்ற தேர்தல்கள் திருத்த சட்ட மூலத்தில் கூறப்பட்டுள்ளது. See Pictures
எனவே சம்மாந்துறை பிரதேச சபைக்கு 4 பெண் அங்கத்தவர்கள் வருவதட்கே வாய்ப்பு உண்டு.)

So, இறுதியாக UNP 2, ACMC 1, SLFP 0 Bonus முறையில் பெண்கள் நியமிக்க வேண்டும். மொத்தமாக (வட்டார முறையில் தெரிவான பெண்ணோடு சேர்த்து) 4 வரும்

குழப்பம்:- ACMC 8 ஆசனங்களையும் வட்டார முறையில் பெற்று அது அனைவரும் ஆணாக இருந்து Bonus இல்லாது போனால் 5 வது பெண் ஆசனத்தை வழங்குவது யார். வெற்றி பெற்ற கட்சியா? தேர்தல் ஆணையாளரே Confuse ஆகிடுவாரு.)

சட்ட சிக்கல்கள்:-
================

விகிதாசாரப்படி ACMC 2 ஆசனங்கள் பெண்கள் இருக்க வேண்டும். But, வட்டார முறையிலேயே 7 ஆண்கள் தெரிவாகி இருப்பதால் அதில் ஒருவரை சட்டப்படி மாற்ற முடியாது. (Bonus மட்டுமே பெண் வழங்க வேண்டும்)

SLFP க்கு விகிதாசாரப்படி 2 பெண்கள் என்று வருகிறது. வட்டாரத்தில் ஒன்று இருப்பதால் Bonus 1 ஆக குறையும். Bonus 1 உம் கொடுக்க தேவை இல்லை. காரணம் வட்டார ஒரு ஆசனத்தோடு மொத்த 4 இல் 1 அதாவது 25% பெண்கள் வருகிறது. So, சட்டப்படி Bonus 2 ஐயும் ஆண்களுக்கே கொடுக்கலாம்.

UNP பொறுத்தவரை விகிதாசாரப்படி 2. அதாவது 8 இல் 2. So, 25% பூர்த்தி. ஆகவே UNP க்கு 2 க்கு மேல் கொடுக்க வேண்டி சட்டத்திலும் முடியாது. விகிதாசாரத்திலும் முடியாது. (விகிதாசாரப்படி கொடுக்க வேண்டி வந்தால் அது SLFP யே கொடுக்கணும். மேலுள்ள கணிப்பை பார்க்க.)

கடைசியில் சம்மாந்துறை பிரதேச சபைக்கு 4 பெண்கள் ஆசனமே (20%) வருகிறது. இது தேர்தல் அடிப்படை சட்டத்தையே மீறுகிறது.

கடைசில தேர்தல் ஆணையாளரே Confuse ஆகிட்டாரு. சட்டமா அதிபரின் உதவியை நாடுகிறார்.

நீதி:- பொம்புள விஷயம் என்றாலே குழப்பமான ஒன்றுதான். பொதுவா சொன்னேன்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog