Breaking

Wednesday

காரைதீவில் தும்புக்கட்டுக்கதை பேசிய எம்.பி.யை துரத்தியடியுங்கள்!


(காரைதீவு  நிருபர் சகா)
அண்மையில் காரைதீவில் நடைபெற்ற த.தே.கூ. தேர்தல் பிரச்சார பகிரங்கமேடையில் ஒரு எம்.பி. அநாகரிகமான கீழ்த்தரமான வார்த்தைகளை பொதுமக்கள் முன் பேசியுள்ளார். எதிர்வரும் 10ஆம் திகதி தேர்தல் முடிந்ததும் காரைதீவார் கூட்டமைப்புதவிர்ந்த ஏனைய வேட்பாளர்களை தும்புத்தடியால் விரசுவார்கள் என்று பகிரங்கமாகக்கூறியுள்ளார். இங்குள்ள வேட்பாளர்கள் அனைவரும் காரைதீவார்கள்தான் என்பதை அவர் மறந்துவிடக்கூடாது.
தேர்தலுக்காக எம்மவர் பிரிந்துகேட்கி;ன்றார்களேதவிர எமது மண்ணைவிட்டுக்கொடுக்க எந்தக்கட்டத்திலும் நாம் தயாரில்லை.  எங்கேயோஇருந்துவந்து காரைதீவாரை காரைதீவான் தும்புக்கட்டால் அடித்துவிரசவேண்டும் என்றுசொல்வதற்கு என்ன நெஞ்சழுத்தம் இருக்கவேண்டும். உடனடியாக அவர் அந்த சொற்பிரயோகத்தை வாபஸ் பெற்று மன்னிப்புக்கேட்கவேண்டும் இன்றேல் உணர்வுள்ள எந்தக்காரைதீவானும் த.தே.கூட்டமைப்பிற்கு ஒருவாக்குத்தானும் அளிக்கக்கூடாது என்று அன்பாகக்கேட்டுக்கொள்கின்றேன்.


காரைதீவு பிரதேசசபைக்காகப் போட்டியிடும் சுயேச்சைக்குழு 1 இன் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்துரையாற்றிய சுயேச்சைக்குழு-1 இன் தலைவர் சந்திரசேகரம் நந்தகுமார் ஆக்ரோசத்துடன்  தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

தேர்தல் என்றால் அனைவரும் வெல்லமுடியாது. அதற்காக இந்தக்கேவலமான சொற்பிரயோகத்தை பகிரங்கமேடையில் பேச ஒரு எம்.பி. வெட்கப்படவில்லையா? அது அவரது வளர்ப்பை எடுத்துக்காட்டுகிறது. அதை காரைதீவில் காட்டவேண்டாம். உங்களை நீங்கள் சொன்ன கருவியால் விரச எமக்கு நேரமெடுக்காது.

சாராயத்திற்கும் தகரத்திற்கும்பணத்திற்கும் உங்களுக்கு பின்னால்திரியும் பினாமிகள் போல முழுக்காரைதீவார்களையும் எண்ணவேண்டாம்.
எங்களுக்கும் அப்படி பேச நேரமெடுக்காது. ஆனால் நாம் பண்புள்ளவர்கள். நாகரீகமானவர்கள்.சுவாமி விபுலாநந்தரின் வழித்தோன்றல்கள். 

இந்தவிடயத்தில் காரைதீவாஎல்லாம் ஒரு குடையின்கீழ் சங்கமித்து தீர்க்கமான முடிவை எடுக்கவேண்டும். 




செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog