Breaking

Monday

ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கையில் தகவல்.!உடலில் மது அருந்தியதற்கான தடயம் .


நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், அவர் குளியல் தொட்டியில் தவறுதலாக மூழ்கி உயிரிழந்துள்ளார் என தடயவியல் அறிக்கை கூறுகிறது.

அவரது உடலில் மது அருந்தியதற்கான தடயம் இருந்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

துபாயில் தனது குடும்ப உறவினர் இல்லத் திருமண விழாவுக்கு சென்றிருந்தபோது கடந்த சனிக்கிழமை இரவு அவர் இறந்ததாக அவரது குடும்பத்தினர் கூறினர்.

இந்நிலையில், துபாய் போலீஸ் வெளியிட்ட நடிகை ஸ்ரீதேவி உடலின் தடயவியல் அறிக்கையானது அவரது குடும்பத்தினருக்கும், இந்திய தூதரகத்திற்கும் வழங்கப்பட்டுள்ளதாக கல்ஃப் நியூஸ் செய்தி தெரிவித்துள்ளது.

இதனால் ஸ்ரீதேவியின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்படும் என தெரிகிறது.

அவரின் இறுதி உடற்கூறாய்வு அறிக்கை இன்னும் முடிவுராத நிலையில், இது வெளியான பிறகுதான் நச்சுயியல் பரிசோதனைகளின் முடிவுகள் தெரிய வரும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், மும்பையில் ஸ்ரீதேவியின் நிதி நிர்வாகத்தை கவனித்து கொண்டிருந்த அமீர், துபாய் போலீஸ் வழங்கியுள்ள தடயவியல் அறிக்கை குறித்து தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்து கருத்து தெரிவித்த ஸ்ரீதேவியின் செய்தி தொடர்பாளர் சமிக்ஷா, அவரது உடல் திங்கட்கிழமை இரவு இந்தியா கொண்டுவரப்படும் என்றும் செவ்வாயன்று இறுதி சடங்குகள் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

-BBC-
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog