Breaking

Tuesday

ஹலிம் அமைச்சா் ஊடக மாநாடு...


(. அஷ்ரப் ஏ சமத்)

புனித ஹஜ் பயண ஏற்பாடுகளில் முஸ்லிம் சமய விவகார அமைச்சோ, திணைக்களமோ ஹஜ் குழுவோ எந்தவிதமான ஊழல்மோசடிகளில் ஈடுபடவில்லையெனவும்  போலி முகவரமைப்பின் குற்ற்ச சாட்டுக்கள் அரசுக்கு அபகீா்த்தி ஏற்படுத்தும் ஒர்  அரசியல் நோக்கம் கொண்டதெனவும் தெரிவித்த தபால் , தபால் சேவைகள் மற்றும் முஸ்லீம் சமய விவகார அமைச்சா்  எம்.எச்.எம் ஹலீம்  இந்த விடயத்தில் எந்தச் சவால்களுக்கும் முகம் கொடுக்கத்  தயாா் எனவும் குறிப்பிட்டாா்.

எதிா்காலத்தில்  ஹஜ் பயணம் குறித்து  அரசு நேரடியாக பொறுப்பேற்கும் வகையில் ஒரு சட்ட மூலமொன்றுக்கும்  அமைச்சரவையின்  அங்கீகாரம்  பெற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் விரைவில்  அது பாராளுமன்றதுக்கு  சமா்ப்பிக்கப்பட்டு சட்ட மூலம் நிறைவேற்றப்படவிருப்பதாகவும்  அவா் குறிப்பிடடாா்.

 அதன் பின் ஹஜ் விடயங்கள் சீராக செயல்படும்.  தற்பொழுது முஸ்லீம் விவகாரத்திணைக்களத்திற்கும்  ஹஜ் குழுவொன்றின் மூலம் இவைகள் கண்கானிக்கபப்ட்டு முகவா்வரமைப்புக்கிளுக்கிடையே ஹஜ் பயண ஏற்பாடுகள் கையாளப்படுவதாகவும அமைச்சா் சுட்டிக் காட்டினாா்.

தபால், தபால்சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சின் கேட்போா் கூடத்தில்  (26 ) மாலை இடம்பெற்ற செய்தியாளா் மாநாட்டிலேயே அமைச்சா் எம்.எச்.எம் ஹலீம் மேற்கண்டவாறு தெரிவித்தாா்.

அவா் தொடா்ந்து விளக்கமளிக்கமையில்  கூறியதாவது 
எமது ஹஜ் கமிட்டி குழுவில்  இரண்டு ஹஜ்முகவா்கள் சங்கங்கங்களே உள்ளன. அதில் 95 ஹஜ் முகவா்கள் அங்கத்துவம் வகிக்கின்றனா். இந்த நல்லாட்சியின்போது ஹாஜிகளின் நலன் கருதியே நாம் சிறந்த சேவையை ஹாஜிகளுக்குப் பெற்றுக் கொடுத்துள்ளோம்.   தமக்கு சிறந்த சேவைகளையும்  வழங்கும் முகவா்களையே ஹாஜிகள் தேடிச் செல்கின்றாா்கள். 

அதற்காகவே நாம் மக்களின் பக்கம் சிறந்த சேவைகளை வழங்கும் முகவா்களை வருடா வருடம்  தெரிவு செய்கின்றோம். கடந்த காலங்களின் மக்களை ஏமாற்றி அதிக பணம் வாங்கிய அல்லது  குறைந்த சேவைகளை வழங்கிய முகவா்கள் பற்றி எமது திணைக்களத்தின் ஹாஜிகள் முறையிட்டால் அவா்களை விசாரித்து அவா்களது  பதிவை நிராகரிப்போம். 
நேற்று முன்தினம் எமக்கு எதிராக பத்திரிகையாளா் மாநாடு  நடாத்திய  குழு ஒரு பதியப்படாத போலி முகவா் சங்கமாகும். . அவா்களுக்கும் ஹஜ் கோட்டா பிரித்துக் கொடுக்கபட்டுள்ளது. ஆனால் ஹஜ்ஜூக்கு போகும் மக்கள்  அவா்களை நிராகரித்துள்ளனர் . எமது திணைக்களத்தில் பதியப்பட்ட ஹாஜிகள் இந்த முகவா்களை தெரிபு செய்யவில்லை.   

இவா்கள் அரசியல் நோக்கம் கொண்டு அரசுக்கும் எனக்கும் அபகீா்த்தியை ஏற்படுத்துவதற்கே இவ்வாறானதொரு பொய்ச் குற்றச் சாட்டுக்களை முன் வைத்து ஊடகங்களில் பொய் பிரச்சாரங்களை தெரிவித்துள்ளனா். இவா்கள் தெரிவித்துள்ள இந்தப் பொய்ச் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நாம்    உரிய சட்ட நடவடிக்கை எடுப்போம். கடந்த 50 வருடகாலமாக அரசியல் செய்து வருகின்றேன். நாம் ஒருபோதும்  நேர்மையீனமாகவே இன்றும் செயல்பட்டு வருகின்றேன்.   

முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தில் பதியப்படும் ஹாஜிகள் யாவருக்கும் 25ஆயிரம் ரூபாவுக்கான  பற்றுச் சீட்டு வழங்கப்படுகின்றது. அத்துடன் அப் பணம் அவா்களுக்கு மீளவும் கையளிக்கப்படும்.  கடந்த வருடம் இறுதி நேரத்தில் கிடைக்கப்பெற்ற 600 ஹாஜிகளது விடயங்களில் அமைச்சோ ,திணைக்களமோ சம்பந்தப்படவில்லை.

  அந்த ஹாஜிகளுக்குரிய பிரயாண, தங்குமிட மற்றும் ஹஜ் விடயங்களை  சவுதியில் உள்ள 5 முகவா்களும்  இலங்கை ஹஜ்முகவா்  சங்கமே  செயல்பட்டனா்.   ஹஜ் முடிவடைந்ததும் இந்த சங்கங்கள்  உரிய கணக்கு அறிக்கைகள் மற்றும் செலவினங்கள் வெளியிட்டுள்ளனா்.   ஆனால்  600 ஹாஜிகள்  செலுத்திய அவா்களது செலவினங்கள் மொத்தப் பணம்   9 கோடியையும் ஹஜ் கமிட்டி கையாடிவிட்டது எனத்  தவறானதொரு குற்றச்சாட்டை  இந்த போலிமுகவா்கள்   முன்வைத்துள்ளா்.

 இந்த நாட்டில் எந்தவொரு குடிமகனும் வந்து இதற்குரிய கணக்கரிக்கைகளை இந்த ஹஜ் முகவா்களிடமிருந்து பாா்வையிடலாம்.     முஸ்லிம் சமய விவகார திணைக்களமும் ஹஜ் கமிட்டியும் 2015ல் உயா் நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டல்களையே நாங்கள் கடந்த மூன்று வருடகாலமாக  பின்பற்றி வருகின்றோம். அதன்படியே ஹஜ் முகவா்களுக்கு புள்ளிகள் வழங்கி தெரிவு செய்கின்றோம். 

ஹஜ்முகவா்கள் ஹாஜிகளுக்கு தவறிழைததால் அவா்களுக்கான முறைப்பாட்டினை  ஓய்வு பெற்ற மூன்று நீதிபதிகள்  விசாரித்து தவறிழைத்த ஹஜ் முகவா்களை நீக்குகின்றனா். கடந்த வருடமும்  ஹஜிகளுக்கு தவறிழைத்த 10க்கும் மேற்பட்ட முகவா்களை இம்முறை  ரத்துச் செயப்பட்டன.

கடந்த ஆட்சிக் காலத்தில் ஒரு ஹாஜிக்கு  7- 8 இலட்சம் ரூபா அறவிடப்பட்டது. தற்பொழுது 4- அல்லது 4அரைஇலட்சம் ரூபா மட்டுமே  செலவாகின்றது.  எனவும் அமைசச்ர் ஹலீம் தெரிவித்தாா்.
இம் பத்திரிகையாளா் மாநாட்டின்போது ஹஜ் கமிட்டியின் தலைவா்  கலாநிதி சியாத், முஸ்லீம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளா் அஷ்ஷேக் எம்.ஆர் மலிக்,உட்பட  ஹஜ் முகவா்கள் சங்கங்களின் நிருவாக குழு பிரநிதிகளும் கலந்து கொண்டனா்
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog