Breaking

Thursday

இரு மாதங்­களில் இரண்­டு­முறை எரி­பொருள் விலை அதி­க­ரிப்பு.

இரு மாதங்­களில் இரண்டு தட­வைகள் எரி­பொருள் விலை அதி­க­ரிக்­கப்­பட்­டது ஏன்? சர்­வ­தேச சந்­தையில் எரி­பொருள் விலை அதி­க­ரிக்­காத நிலை­யிலும், அர­சாங்கம் புதிய வரிக்­கொள்­கையை வெளி­யி­டாத நேரத்­திலும் எரி­பொருள் விலையை அதி­க­ரிக்க காரணம் என்ன என மக்கள் விடு­தலை முன்­னணி  கேள்வி எழுப்­பி­யது.
அனைத்து வகை­யிலும் மக்­களை வரிச்­சு­மையில் நெருக்­கினால் மக்­களின் நிலை என்­ன­வாகும். ஆட்­சிக்கு எதி­ரான புரட்சி வெடிக்கும் எனவும் ஜே.வி.பி. கூறு­கின்­றது.
மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி தலை­மை­ய­கத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் ரில்வின் சில்வா இதனைக் குறிப்­பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்
இரண்டு மாதங்­களில் இரண்டு தட­வைகள் எரி­பொருள் விலை­யினை அர­சாங்கம் அதி­க­ரித்­துள்­ளது. மே மாதம் 10 ஆம் திகதி எரி­பொருள் விலை­யினை அதி­க­ரித்­தனர். அதன் பின்னர் மீண்டும் நேற்று நள்­ளி­ரவு முதல் எரி­பொருள் விலை­யினை அதி­க­ரித்­துள்­ளனர். பெற்றோல் 8 ரூபா­வி­னாலும், டீசல் 9 ரூபா­வி­னாலும், சூப்பர் பெற்றோல் 10 ரூபா­வி­னாலும் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. பெற்­றோலை கடந்த மே மாதத்தில் 20 ரூபா­வினால் அதி­க­ரித்­தனர். இப்­போது மேலும் 8 ரூபாவால் அதி­க­ரித்­துள்­ளனர். டீசலை 14 ரூபாவால் மே மாதத்தில் அதி­க­ரித்­தனர், இப்­போது மீண்டும் 9 ரூபாவால் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. அதேபோல் மண்­ணெண்ணெய் விலையும் உயர்­வா­கவே உள்­ளது. இது மிகவும் மோச­மான நிலை­யாகும். மக்கள் மீது இவ்­வாறு சுமை­யினை சுமத்­து­வது கடு­மை­யாக கண்­டிக்­கத்­தக்க விட­ய­மாகும். விலை குறைப்­பினை அர­சாங்கம் உட­ன­டி­யாக மேற்­கொள்ள வேண்டும்.
இலங்­கையில் பிர­தான இரண்டு நிறு­வ­னங்­களின் மூல­மா­கவே எண்ணெய் பகி­ரப்­ப­டு­கின்­றது. லங்கா ஐ.ஒ.சி மற்றும் இலங்கை பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­பனம் ஆகிய இரண்­டுமே அவை­யாகும், இவை நினைத்த நேரத்தில் தமது தீர்­மா­னங்­களை எடுக்­கலாம் என்ற நிலை­மையும் உள்­ளது. இவ்­வாறு இருக்­கை­யில்தான் லங்கா ஐ.ஒ.சி மற்றும் இலங்கை பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­பனம் மற்றும் நிதி அமைச்சு ஆகி­யன இணைந்து புதிய விலை­பட்­டியல் ஒன்­றினை வெளி­யிட்­டுள்­ளன.  இரண்டு மாதங்­களில் மாற்­றங்­களை கொண்­டு­வரும் நோக்­கத்தில் இதனை கொண்­டு­வந்த போதும் ஒவ்­வொரு இரு மாதங்­க­ளுக்கும் ஒரு­முறை எண்ணெய் விலை அதி­க­ரிப்­பையே காட்டி வரு­கின்­றது. விலையை குறைப்­ப­தாக தெரி­ய­வில்லை.
கடந்த 5 ஆம் திகதி எண்ணெய் விலை அதி­க­ரிக்கும் என அர­சாங்கம் கூறி­யது, எனினும் அடுத்த நாள் ஜனா­தி­பதி விலை உயர்வை தடுத்தார். எனினும் இப்­போது மீண்டும் அமைச்­ச­ரவை தீர்­மானம் எடுத்து எண்ணெய் விலை­யினை அதி­க­ரித்­துள்­ளது. இதில் பாரிய குழப்­பங்கள் உள்­ளன. இரண்டு மாதங்­க­ளுக்கு முன்னர் எண்ணெய் விலையை அதி­க­ரிக்கும் போது சர்­வ­தேச சந்­தையை காரணம் காட்­டியும் அர­சாங்­கதின் புதிய வரிக் கொள்­கையை கூறியும் அதி­க­ரித்­தனர்.  எனினும் இப்­போது எரி­பொருள் விலை அதி­க­ரிக்க எந்த கார­ணத்­தையும் கூற­வில்லை. உலக சந்­தையில் எண்ணெய் விலை அதி­க­ரிக்­க­வில்லை. அர­சாங்கம் புதிய வரி­களை பிறப்­பிக்­கவும் இல்லை. அவ்­வாறு இருக்­கையில் ஏன் விலை  அதி­க­ரித்­தது. அர­சாங்கம் நினைத்த நேரத்தில் விலை உயர்வை கூட்டி அதன் மூல­மாக தமது வரு­மா­னத்தை தக்­க­வைத்து வரு­கின்­றது. இலங்­கைக்கு எண்ணெய் இறக்­கு­மதி செய்­யப்­படும் சூழலில் பெற்றோல் ஒரு லீட்டர் துறை­மு­கத்தில் இறக்கும் போது அதனை 78.43 சதத்­துக்கு அர­சாங்கம் பெற்­றுக்­கொள்­கின்­றது.  அதற்கு அர­சாங்கம் 60.63 என்ற வரியை செலுத்­தியே விற்­ப­னைக்கு விடு­கின்­றது. அதன் அடிப்­ப­டையில் 139 ரூபாதான் அதன் உண்­மை­யான பெறு­ம­தி­யாக உள்­ளது. ஆனால் இப்­போது விற்கும் விலை­யாக 145 ரூபா உள்­ளது. அப்­ப­டி­யாயின் இதன் மூல­மாக அர­சாங்கம் 5.94 ரூபாய் இலா­பத்தை ஒரு லீட்டர் பெற்­றோலில் பெறு­கின்­றது. டீசல் ஒரு லிட்­ட­ருக்கும் 2 ரூபாய் மேல­திக இலாபம் கிடைக்­கின்­றது. இந்­நி­லையில் புதி­தாக எண்ணெய் விலை அதி­க­ரிக்க வேண்­டிய அவ­சியம் இல்லை.
அர­சாங்­கத்தின் சலு­கைகளை தக்க வைத்­து­க்கொள்ள மக்கள் மீது சுமையை செலுத்­து­வது நியா­ய­மற்ற கார­ண­மாகும். பாரிய அளவில் கொள்­ளை­ய­டித்த நபர்கள் எந்­த­வித சிக்­கலும் இல்­லாது அச்சம் இல்­லாது வாழ்ந்து வரு­கின்­றனர். அவர்­க­ளிடம் இருந்து பணத்தை மீளப் பெறவும் தீர்­மானம் எடுக்­க­வில்லை. ஆனால் மக்கள் அன்­றாடம் சுமை­களை எதிர்­கொள்ள நேர்ந்­துள்­ளது. இனியும் மக்கள் இந்த சுமைகளை சுமக்கப் போகிறீர்களா அல்லது போராடப் போகின்றர்களா என்பது தீர்மானிக்கப்பட வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog