Breaking

Monday

சம்மாந்துறைக்கு பொற்காலமா ? அல்லது பொல்லாத காலமா ??


சம்மாந்துறையின் சரித்திரத்தில் சம்மாந்துறையில் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் இது சம்மாந்துறைக்கு பொற்காலமா ? அல்லது பொல்லாத காலமா ?? இது பொற்காலமாக அமைய வேண்டுமென்றால், கட்சி வேறுபாடுகளையும், கருத்து வேறுபாடுகளையும் மறந்து இது எங்கள் ஊர், நாங்கள் யாராக இருந்தாலும் சகோதரர்கள், யார் குற்றினாலும் அரிசியானால் சரி என்ற பரந்த மனப்பாண்மையுடன் பதவி ஒரு "அமானிதம்" நாளை மறுமை நாளில் இது பற்றி விசாரிக்கப்படுவோம் என்ற எண்ணம் எந்த நேரமும் இருந்தாலொழிய இன்று கிடைத்திருக்கும் இந்த பொன்னான சந்தர்ப்பத்தை நாம் தவற விட்டுவிடுவோம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்துக் கிடையாது. சம்மாந்துறையை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல வேண்டுமானால் முதலில் காலதாமதமின்றி உடனடியாக பஸ் நிலையத்தையும், கைத்தொழில் பேட்டைகளையும் அமைக்க வேண்டும் என்பது யாவரும் அறிந்ததே !!!
பஸ் நிலையம் அமைக்க உத்தேசிக்கப் பட்டுள்ள பல நோக்குக் கூட்டுறவுச் சங்க வளாகமானது அரசாங்கத்துக்கு சொந்தமான காணியாகும் இதில் முழுவதிலும் பஸ் நிலையத்தை அமைத்தால்தான் பஸ் வண்டிகளை இலகுவாகத் திருப்பவும், சனப்போக்கு வரத்து நெரிசல்களிருந்து விபத்துக்களைத்தவிர்க்கவும் முடியும். அதுமட்டுமல்ல இதில் பயணிகளின் குறிப்பாகப் பெண்களின் நலன் கருதி அம்பாறை பஸ் நிலையத்தில் உள்ளது போல ஒரு நவீன மல, சல கூட வசதிகளும் செய்ய வேண்டியிருப்பதால் இதன் முழுக்காணியையும் பஸ் நிலையத்துக்கும் அதனுடன் சம்பந்தப் பட்ட தேவைகளுக்கு மட்டுமே உபயோகப் படுத்துவது காலத்தின் கட்டாய தேவையாகும். இதில் மூக்கை நுழைக்க விரும்பும் விசக்கிருமிகளுக்கு இடம் கொடுத்தால் நமதூரின் நவீன மயப்படுத்தல் கேலிக்குரியதாக மாறிவிடும் என்பது யாவரும் அறிந்ததே ! கௌரவ மன்சூர் எம்பியின் இந்த முயற்சிக்கு எல்லா ஒத்துழைப்புக்களையும் வழங்கி இந்த பஸ் நிலையத்தை நிஜமாக்குவோம். கைத்தொழில் பேட்டைகள் ...
சம்மாந்துறையின் வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க கைத்தொழில் பேட்டைகளை உருவாக்க வேண்டிய அரிய தருணம் இது .... இதில் சிங்கள நிறுவங்களின் முதலீடு, நமது காணிகள் என்று அறிவு பூர்வமற்ற வாதங்களை விட்டுவிட்டு முதலீடு செய்பவர்களுக்கு நிலம் கொடுத்தால் தான் அவர்கள் மனமுவர்ந்து முதலீடு செய்ய வருவார்கள். இல்லாமல் அவன் சிங்களவன் இவன் தமிழன் காணிகளை எப்படிக்கொடுப்பது என்று வாதங்களும், பிரதி வாதங்களும் செய்யத்தொடங்கினால் ஒருநாளும் இது நடக்காது. மலேசியா, வியற்நாம், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இலவசமாக தங்கள் காணிகளை முதலீடு செய்பவர்களுக்கு வழங்கியே பெரும் பெரும் தொழில் பேட்டைகளை உருவாக்கியிருக்கின்றார்கள். கருத்து வேறுபாடு என்னும் கறையான்கள் வந்து உங்கள் புரிந்துணர்வை சீரழிக்கும் மிகவும் புத்தியுடன் நடந்து கொள்ளுங்கள். ஓரத்தில் நின்று கொண்டு ஓய்வெடுக்க நேரமில்லை இந்த அபிவிருத்திகளை இன்றே ஆரம்பியுங்கள் "மாமனிதர் அஷ்ரப் அவர்களின் ஒரு அன்பான வேண்டுகோள் தொடரும் ....
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog