Breaking

Wednesday

இஸ்மாயில்புர எரிப்புச்சம்பவத்திற்கு தனிப்பட்ட தகராறே காரணம்! மதமாற்றம் அல்ல: சில ஊடகங்கள் ஊதிக்கெடுத்தன: இன்று ஊடகமாநாட்டில் சம்மாந்துறை பிரதேசசபைஉபதவிசாளர் ஜெயசந்திரன்!


(காரைதீவு நிருபர் சகா)

அண்மையில் இடம்பெற்ற இஸ்மாயில்புர வீடெரிப்புச் சம்பவத்திற்கு தனிப்பட்ட தகராறே காரணமாகும். தவிர மதம்மாறாமைக்காக வீட்டை எரித்தது என்று கூறியது பச்சைப்பொய். ஒருசில ஊடகங்கள் ஊதிக்கெடுத்தன.

இவ்வாறு சம்மாந்துறைப் பிரதேசசபையில்  இன்று  நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உபதவிசாளர் வி.ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.

குறித்த ஊடகமாநாடு   இன்று (11)செவ்வாய்க்கிழமை பகல் பிரதேசசபையின் கூட்டமண்டபத்தில் நடைபெற்றது.

அங்கு உபதவிசாளர் வி.ஜெயச்சந்திரன் உறுப்பினர்களான என்.கோவிந்தசாமி அ.அச்சுமொகமட் சிரேஸ்ட்ட சட்டத்தரணி எம்.ஜஎம்.முஸ்தபா யுசுப்லெவ்வை ஏசிஎம். சஹீல் ஆகியோர் சமுமளித்திருந்தனர்.

இன்று  சம்மாந்துறைப் பிரதேசசபையின் மாதாந்த அமர்வு சபைத்தவிசாளர் எ.எம்.எம். நௌசாட் தலைமையில் காலை நடைபெற்றது. அக்கூட்டத்தில் இஸ்மாயில்புரசம்பவம் தொடர்பாக எமதுசபை ஊடகமாநாடொன்றை நடாத்தி மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில் அமர்வின்பின்னர் இந்த ஊடகமாநாடு பகல் நடைபெற்றது.


அங்கு உபதவிசாளர் ஜெயச்சந்திரன் மேலும் கூறுகையில்:

சம்மாந்துறைப்பிரதேசபைக்குட்பட்ட வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புரத்தில் வீடும் ஆட்டோவும் எரியூட்டப்பட்டமை உண்மைதான். ஆனால் அது பலவந்தமான மதமாற்றத்திற்கானது அல்ல. நான் அந்த வளத்தாப்பிட்டியைச்சேர்ந்தவன்தான். உபதவிசாளராக இருக்கிறேன்.
அங்கு நாம் சென்று பூரணமாக விசாரித்தபோது உண்மை வெளிவந்தது.

அங்கு யாரும் அவரையோ அவரது குடும்பத்தையோ மதம் மாறச் சொல்லவில்லை. அவருக்குத்தேவை புதிய ஆட்டோ. அதற்காகவே இந்த நாடகம்.
இரு இனங்களையும் மூட்டிவிடுகின்ற நாடகம் அரங்கேறியிருக்கிறது. அதற்கு ஒருசில ஊடகங்கள் குறிப்பாக வெளிநாட்டு ஊடகங்கள் தீனிபோட்டுள்ளன. இச்சம்பவத்தை இனவாதமாக்கி ஊதிப்பெருப்பித்துள்ளன.

ஆனால் இஸ்மாயில் புரத்தில் இன்றும் தமிழ் முஸ்லிம் மக்கள் உறவாகவே உள்ளனர். எனவே இச்சம்பவத்திற்காக அந்த நபர் சொன்ன மதமாற்றம் என்பது வெறும் பொய். 

நான் அவரிடம் நேற்று விசாரித்தேன். நீ ஏன் இவ்வாறு பொய் சொன்னாய் ? யார் மதம் மாறச்சொன்னது? என்று கேட்டபோது எனக்கு ஜீவாதாரத்திற்கான புதிய ஆட்டோவைப் பெற்றுத்தந்தால் நான் சொன்னதை வாபஸ் வாங்குவேன் என்றார். எனவே இது முழுமுழுக்க உண்மைக்குப் புற்ம்பான செய்தி என்றார்.

உறுப்பினர் எ.அச்சிமொகமட் கூறுகையில்:

தமழ் முஸ்லிம் மக்கள் பழையதை மறந்து இன்று அந்நியோன்யமாக வாழ்ந்துவரும் இன்றைய காலகட்டத்தில் இவர் தனிப்பட்ட சுயலாபத்திற்காக இரு இனங்களையும் மீண்டும் மூட்டிவிடுகின்ற செயலைச் செய்துள்ளார்.
அந்தச்செய்தியைப் பாக்கின்ற தமிழ்மக்கள் நிச்சயமாக முஸ்லிம் மக்கள் மீது ஆத்திரமடையத்தான் செய்வார்கள். 

ஆனால் நடந்ததோ வேறு. அண்மையில் தமிழ்த்தந்தியிலும் உண்மையை ஆராயாமல் இச்சம்பத்தை எழுதியுள்ளார்கள்.  ஊடகங்கள் பொறுப்போடு நடந்துகொள்ளவேண்டும்.
இலங்கையின் பழம்பெரும் தம்pழ் தேசியப்பத்திரிகைகள் இச்செய்தியை வெளியிடவில்லை. உள்ளுர் ஊடகவியலாளர்ளுக்கு நன்றிகள் பாராட்டுக்கள். என்றார்.

உறுப்பினர் நா.கோவிந்தசாமி கூறுகையில்:
அவரது தனிப்பட்ட பிணக்குகாரணமாக ஊடகமொன்றிற்கு பிழையான முற்றிலும் பொய்யான செய்தியை வழங்கி குழப்பியுள்ளார். பொலிசார் அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.என்றார். 

செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog