Breaking

Monday

தேர்தல் தொடர்பில் இன்று மற்றுமொரு விசேட வர்த்தமானி வெளியானது.


நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் கட்டுப்பணம் வைப்பிலிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்படி, நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 16வது அத்தியாயத்தின் கீழ் சுயாதீன குழுக்கள் தத்தமது வேட்புமனு தாக்கலின்போது ஒவ்வொரு வேட்பாளருக்கும் இரண்டாயிரம் ரூபா என்ற அடிப்படையில் கணக்கிட்டு தெரிவத்தாட்சி அதிகாரியிடம் வைப்பிலிடவேண்டும்.

அத்துடன், ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகள் கட்டுப்பணம் வைப்பிலிடக்கூடாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கட்டுப்பணங்களை பெற்றுக்கொள்வதற்காக குறிப்பிட்ட மாவட்ட செயலகத்தில் அல்லது மாவட்ட தேர்தல் காரியாலயத்தில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஒவ்வொறு தேர்தல் தொகுதிக்கும் தெரிவுசெய்துகொள்ளப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக இரண்டு வேட்பாளர்களின் பெயர்களை வேட்புமனுவில் குறிப்பிடவேண்டும்இதேவைளை, கடந்த ஐந்தாம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு எதிர்வரும் ஜனவரி ஐந்தாம் திகதி தேர்தல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றில் 17 மனுக்கள் தாக்கல்.


செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog